Tuesday, November 10, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 14

காலை இதோ விடிந்துவிட்டது. எனது கேள்விகளும் எழுந்துவிட்டது எனக்குள் மீண்டும். கலையாத தூக்கத்தோடு படி இறங்கி ஹாலில் டிவி முன் அமர்ந்தேன். கீதாவும் அப்போதுதான் வந்து எனது அருகில் வந்து சன் மியூசிக் வைத்தாள்.

"என்னங்கடி காலையில் டிவி முன்னாடி? இப்படி இருந்தீங்க அப்படினா எப்படி  வீட்டுல எப்படி குப்பை கொட்ட முடியும்?" என்றார் அம்மா.

இந்த வார்த்தை என்னது சந்தேகத்தையும் கோபத்தையும் அதிகமாகியது. சற்றென்று நான் சமையலறை சென்று பாத்திரம் விலக்க ஆரம்பித்தேன். கீதாவும் என்னுடன் சேர்த்து வேலை ஆரம்பித்தாள். அப்போது என்னை அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டது.

"அபி, என்ன ஒரு மாதிரி இருக்க?"

"அது எல்லாம் ஒன்னும் இல்லைமா" பொய் சொன்னேன் நான். 

"இல்லை.. நேத்துல இருந்து எதோ வித்தியாசம் தெரியுது. மறைக்காம  சொல்லுடி" என்றார் அம்மா.

நான் என் மனதில் இருந்ததை சொல்லி முடித்தேன். அம்மாவும் தங்கையும் அமைதியாக கேட்டனர். பின்பு அம்மா பேசத் தொடங்கினார்.

"அபி, நம்ம எல்லோருக்குமே தெரியும் நீ இதை உன் நண்பி பூர்ணிமாக்காக செய்யுற. நீ என் ஒரே பையன். நீ ஒரு பொண்ணுமாதிரி இருக்குறது எனக்கு முதல சம்மதம் இல்லாட்டியும் நான் உன் ஆசைக்காக ஒத்துகிட்டேன். உன் ஆசையும் சந்தோசமும் தான் எனக்கு முக்கியம்.

நீ 4 வருஷம் ஒரு பெண் மாதிரி இந்த உலகத்துல நடிக்க போகிறாய். இல்லையா? அப்படி இருக்கும் பொது கரெக்டா இருந்தாதான் யாருக்கும் சந்தேகம் வராது. உனக்காகத்தான் நானும் பூரணி அம்மாவும் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்குறோம். பூரணி அம்மா இந்த ஊரு கலெக்டர் என்பதால் நமக்கு கொஞ்சம் ஈசி.

நீ ஒரு உண்மையான பொண்ணு மாதிரி நடந்துகிட்டா தான் யாருக்கும் சந்தேகம் வராது. அதுக்கு உன்னை நீ ஒரு பெண்ணாக முதல ஏத்துக்கணும். அப்போ தான் மத்தவங்களை நம்ப வைக்க முடியும்.

ஆனா உனக்குள்ள இப்படி ஒரு குழப்பம் இருந்த மறுபடி யோசி. தப்பு இல்ல. நீ எந்த முடிவுக்கு வந்தாலும் நாங்க உனக்கு துணையாய் இருப்போம்." பேசி முடித்தார் அம்மா.

இப்போது என் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

"இன்னும் வெறும் 4 வருஷம் தான் நான் அபிராமி மாதிரி இருப்பேன். அப்புறம் நான் பழையமாதிரி ஒரு பையன் மாதிரி வாழ்க்கை வாழ்வேன். இப்போ இந்த 4 வருஷம் மட்டும் இந்த உலகத்துக்கு நான் பொண்ணு மாதிரி இருக்க போறேன். இனி எனக்கு எந்த குழப்பமும் இல்லை" தெளிவாய் சொன்னேன் அம்மாவிடமும் கீதாவிடமும்.

கீதா சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடித்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் அக்கா. எனக்கு என் அக்காவைத் தான் ரொம்ப புடிச்சி இருக்கு. வாழ்க்கை முழுக்க இப்படி  இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்."

கொஞ்சம் சிரித்து விட்டு அவளை கட்டிப்பிடுத்து நன்றி சொன்னேன்.

மேலும் அம்மா தொடர்ந்து பேசினார். 

"அபிராமி , நான் ஒண்ணு சொல்றேன். இது கீதாவுக்கு தெரியும், புரியும். நீயும் புரிஞ்சிக்கணும். ஒரு பொம்பளையா இருப்பது அவ்ளோ சுலபம் இல்லை. வெளியில் ஆண்கள் நம்மை ஒரு போதை பொருள் மாதிரித்தான் பாப்பாங்க. நேத்து நீ ஒரு பையன் உன்னை பாத்ததுக்காக அழுத என்று கீதா சொன்னாள். அவன் உன்னை ஒரு பொண்ணுமாதிரி பாத்தான். சோ அதுல தப்பு இல்லை. நம்மதான் ஜாக்கிரதையாய் இருக்கனும்.

பொண்ணுங்க ஈசியா ஒரு பையன் கிட்ட விழுந்துடுவாங்க. பாத்து நடந்துக்கோ." அறிவுரை முடித்தார் அம்மா. அப்புறம் வேலை எல்லாம் முடித்து நாங்கள் மூவரும் பாலிமர் டிவியில் ஹிந்தி சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம். அப்போது பூர்ணிமாவும் அவளது அம்மாவும் எங்கள் வீட்டுக்குள்ளே வந்தனர். ஏனோ பூரணி பள்ளி சீருடை அணிந்திருந்தாள்.

"வாங்க ஆண்டி. வாடி பூரணி" இருவரையும் அழைத்து அமரச் செய்தேன். அம்மா என்னிடம் காப்பி போட்டு கொண்டு வரச் சொன்னார்கள். எங்கள் வீட்டு வேலைக்காரி செல்வி அக்கா விடுப்பில் சென்றதால் என்னிடம் சொன்னார்கள். ஆண்டி கீதாவிடம் அவளது விளையாட்டு போட்டி பற்றி பேசிக்கொண்டு இருந்ததால் அவள் வரவில்லை.

நான் சமையல் அறையில் காப்பி போட்டுக்கொண்டு இருக்கும் பொது பூரணி வந்தாள்.

"என்னடி, நல்லா காப்பி போட கத்துகிட்டியா? ஒழுங்கா கத்துக்கோ. பின்னாடி உன் புருஷனுக்கு நீ தான் டெய்லி காப்பி போட்டு காலைல எழுப்பனும்" என்று கிண்டல் அடித்தாள்.

"சீ..சும்மா இருடி."

"அய்யோ.. இங்க பாரேன் இவ வெட்கப் படுறத.. என் கண்ணே பட்டிடும் போல."

"ஏன் என்னை ரொம்ப கிண்டல் பண்ணுற பூரணி?"

"இல்லடி, வெட்கப்படும்போது நீ ரொம்ப அழகா இருக்க. இவ்ளோ வருஷமா உனக்குள்ள ஒளிஞ்சி கிட்டு இருந்த பெண்மை அழகா வெளிய வருதுடி."

எனக்கு வெட்கமும் பொங்கியது. அடுப்பில் பாலும் தான். காப்பி போட்டு ஒரு தட்டில் 5 கப்பில் ஒற்றி எடுத்து வந்தேன்.

"ஓ, உங்க பொண்ணு அபிராமி இப்போ ரொம்ப முன்னேறி விட்டாபோல. குட் குட். சரி, எனக்கு உங்க 2 பொண்ணுங்க போட்டோ வேணும். காலேஜ்ல கேட்டாங்க. ஸ்கூல் யூனிபார்ம் போட்ட மாதிரி தான் வேணுமாம். இவகிட்டையும் புது போட்டோ இல்லை. ஸோ இவங்க மூணு பேரும் ஸ்டுடியோ போய் புது போட்டோ எடுத்துட்டு வரட்டும்" என்றார் ஆண்டி.

"இவளுக்குன்னு யூனிபார்ம் இல்லை. கீதாவோட யூனிபார்ம்தான் இவ போடணும். சைஸ் கரெக்ட் இருக்கும். சோ ப்ரொப்லெம் இல்லை." அம்மா சொன்னார்.

"நல்லது.. அபிராமி இன்னுமா தலைக்கு விக் யூஸ் பண்ணுற? சீக்கிரம் உண்மையான கூந்தல் வளர்க்கணும். அப்போதான் இயல்பா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா இப்படி வெறும் நைட்டி போட்டுக்கிட்டு நிக்க கூடாது. மேல டவல் எதாவது போட்டுக்கணும். நாங்க இருக்கும்போது இப்போ ஓகே. நான் பொதுவா சொல்றேன்."

"சரிங்க ஆண்டி. இனிமேல் பாத்துக்குறேன். எனக்கும் ரொம்ப ஆசைதான் கீதா மாதிரி நீளமான முடி வேணும்னு"

"ஹ்ம்ம்ம், இது பெண்களோட இயல்பான ஆசை..உனக்கும் ஒட்டிகிச்சா இந்த கொஞ்ச நாளைல" சிரித்தார்கள் அனைவரும்.

இப்போது கீதாவும் பூரணியும் என் அறைக்கு ஒரு பள்ளி சீருடை எடுத்துக்கொண்டு வந்தனர். என்னை அதை அணியச்சொல்லி விட்டு இருவரும் என் எதிரே அமர்ந்தனர்.

நான் அப்போது அணிந்திருந்த நைட்டி மற்றும் உள்பாவாடை கழட்டி விட்டு என் பிரா மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்து நின்றுகொண்டு இருந்தேன்.

"இங்க பாத்தியா கீதா உன் அக்காவை, எதோ பிரா கம்பெனிக்கு விளம்பரம் பண்ணுறமாதிரி நிக்குறா..."

"என்ன இப்போ. என் அக்காவுக்கு என்ன குறைச்சல்." இது கீதாவின் குரல்.

நான் இதை எல்லாம் கண்டுகொள்ளாத மாதிரி சீருடை சட்டை அணிய ஆரம்பித்தேன். அப்போது பூரணி என்னை நிறுத்தச் சொன்னாள்.

"இந்த டிரஸ்க்கு இந்த பிரா எல்லாம் போடகூடாது. எல்லா பிரா எல்லா டிரஸ்க்குக்கும் போடா முடியாது. போட்டாலும் சரி இருக்காது. இந்த மாதிரி டிரஸ்க்கு சீம்லெஸ் பிரா தான் போடணும். அப்போதான் நல்லா இருக்கும். உனக்கும் நல்ல பிட்டிங் கிடைக்கும். இல்லாட்டி ட்ரெஸ்  கொஞ்சம் வித்தியாசமா தெரியும்."

கீதா அவள் அறையில் இருந்து ஒரு பிங்க் பிரா எடுத்துக் கொடுத்தாள். அதை அணிந்தபின் நான் சீருடை அணிந்து தயாரானேன். நாங்கள் மூவரும் தயார். நாங்கள் ஸ்டுடியோவில் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டு, கீதாவின் ஆசைக்காக மூவரும் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று கீதா விஸ்பர் சானிடரி நாப்கின் ஒன்று வாங்கினாள்.

"ஹே கீதா, இப்போ எதுக்கு இதை வாங்குற? அதான் ஒரு பாக்கெட் வீட்டுல இருக்குல?"

"இது எனக்கு இல்லடி. உனக்கு. நேத்து நீதான உனக்கும் இது வேணும்னு கேட்ட. எனக்கும் அது சரினு தோணிச்சு. ஒரு பொண்ணுனா இது எல்லாம் பழகனும்." என்றாள் கீதா.

"ஆமா அபி.. இதுல்லாம் உன் காலேஜ் பைல இருந்தாதான் உன்னை ஒரு பொண்ணுன்னு இயல்பா நினைப்பாங்க. அப்புறம் பீரியட்ஸ்னு சொல்லி லீவ் கூட எடுக்கலாம்" சிரித்தாள் பூர்ணிமா.

வீட்டுற்கு வந்தபின் சீக்கிரம் ஓடியது. அம்மா வேளைக்கு சென்றதால் நாங்கள் மூவர் மட்டும் இருந்து விஷயங்கள் பல பேசினோம். இறுதியில் பொழுது சாந்தது. அதோடு என் உடம்பில் நைட்டியும் ஏறியது.

Sunday, November 8, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 13

இரவில் நடு தூக்கத்தில் எழுந்தேன். அதற்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. நாளை வெளியில் செல்லும்போது என் கூந்தல் அழகை மாற்ற வேண்டும். நேற்று படித்த மங்கையர் மலர் புத்தகத்தில் இருந்த சில டிசைன் மாதிரி எனக்கு கூந்தல் முடி வளர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். காலையில் அம்மாவிடமும் , கீதாவிடமும் இதை சொல்ல வேண்டும். இவ்வாறு பலவற்றை யோசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது விடிந்தது.

காலையில் பல் விலக்கிவிட்டு கீழே வந்தேன். இப்போதெல்லாம் நான் இரவில் நைட்டி தான் அணிகிறேன். நானும் கீதாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது டிவியில் விஸ்பர் பேட் விளம்பரம் வந்தது.

"கீதா, நான் இப்போ ஒரு பொண்ணு மாதிரி எல்லாம் பண்ணுறேன். இது மட்டும் ஏன் இல்லை?"

"இதுவா? விஸ்பர் பேட் பத்தி சொல்றியா?"

"ஆமா"

"சரி  சரி, நான்  உனக்கு இன்னக்கி நைட் எடுத்து தரேன்."

"ஓகே டி. நான் சொல்ல மறந்துட்டேன். எனக்கு நேத்து கனவு வந்ததுடி. உனக்கு கல்யாணம் நடக்குற மாதிரி."

"நல்ல விஷயம், தான்", என்று  குறும்பாய் சிரித்தாள். "அப்புறம் சொல்லு.."

"அதுமட்டும் இல்லை கீதா. அம்மா நேத்து சொன்ன மாதிரி எனக்கும் உனக்கும் ஒரே டைம், ஒரே மாப்பிள்ளை. நம்ம ரெண்டு பேருக்கும் தாலி கட்டறமாதிரி கனவுடி." என்று எனக்கு தூக்கம் போனதைப் பற்றியும் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"என்னங்கடி, எதோ கல்யாணம், தாலி என்று காதுல விழுது. என்ன விஷயம்?" என்று அம்மாவின் குரல் கேட்டது. அப்போது அம்மா எங்களுக்காக கையில் தேநீர் எடுத்துக் கொண்டுவந்தார்.

கீதா என் கனவு பற்றி அம்மாவிடம் சொன்னாள்.

"நான் உங்க  ரெண்டு பெயரையும் ரொம்ப சின்னப் போன்னுங்கனு நினைச்சேன். இப்போ தான் புரியுது, நீங்க வயசுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு. என் தப்புப்தான்." என்றார் அம்மா. பின்பு அவரே தொடந்தார்.

"கீதா, நீ யாராவது பையனை லவ் கிவ் பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லமா."

"நீ, அபிராமி? யாராவது பையன் உன்  மனசுல இருக்கானா டி?"

"அய்யோயோ.. அது எல்லாம் இல்லை. உங்களுக்கே தெரியும், நான் இப்போ  பொண்ணுங்க மாதிரி டிரஸ் மட்டும்தான் பண்ணிக்கிறேன்."

"ஹ்ம்ம்.. எனக்கு நீயும் என் பொண்ணுதான். அதான் அவளை கேட்டமாதிரி உன்னையும் என்னை அறியாமல் கேட்டுட்டேன். சரி. நீங்க காதலிக்கிறது எனக்கு ப்ரோப்ளம் இல்ல. பட் எல்லை மீறக்கூடாது. படிப்பு முக்கியம்". அம்மா அக்கறையுடன் சொன்னார்.

நாங்கள் முன்பே முடிவு செய்தது போல நான், கீதா மற்றும் பூர்ணிமா, மூவரும் ஷாப்பிங் போக கிளம்பிவிட்டோம். அம்மா எங்களை பார்த்து செலவு செய்யச் சொன்னார்கள். ஆடைகள் பல ஏற்கனவே நிறைய வாங்கிவிட்டதால் இந்த முறை மற்றவைக்கு செலவு செய்யச் சொல்லி அனுப்பினார்.

அம்மா அனுமதியுடன் இன்று ஒரு பெண்ணாக வெளியில் போகபோகிறேன்.   அதனால் கீதாவையும் பூர்ணிமாவையும் எனக்கு உதவும்படி சொன்னார். நான் முன்பு ஒருமுறை வெளியில் சென்றது தெரியாது.

நானும் கீதாவும் எனக்கு எந்த டிரஸ் போட என்று பேசிக்கொண்டிருந்தபோது, பூரணி ஒரு யோசனை சொன்னாள். 

பூர்ணிமாவின்  மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவள் அணிந்த பாவாடை தாவணியை அவள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்தாள். மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆடை அது. அவள் யோசனையும் அந்த பாவாடை தாவணியும் எனக்கு பிடித்தால் நான் சம்மதித்தேன்.

நான் ஒரு சிகப்பு பிரா மட்டும் பேன்ட்டி அணிந்து, என் அறைக்குள் அவர்கள்  இருவரையும் அழைத்தேன். இப்பொது எனக்கு இப்படி மற்ற பெண்கள் முன் இப்படி இருக்க பழக்கம் ஆகிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. 

"பரவா இல்லை, நீயே சொந்தமா பிரா போட பழகிட்ட. ஹ்ம்ம்" என்றாள் கீதா.

என்னை ஒருமுறை முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, ஒரு பக்கம் திரும்பி இருந்த என் பிரா ஸ்ட்ராப் அட்ஜஸ்ட் செய்துவிட்டாள் பூரணி. ஏற்கனவே பிராவினுள் ஸ்லிப்ஸ் வைத்து இருந்ததால், ப்ளௌஸ் அணிந்த பின், என் மார்பகம் ஒரு அழகு தந்தது. இருவர் உதவியுடன் ஆடை அணிந்து தயாரானேன். பூரணி ஏற்கனவே தயாராகி இருந்ததால் கீதா மட்டும் கிளம்ப வேண்டும் இனி.

இதோ நாங்கள் இப்போது தயார். இந்த முறை மூவரும் மாநகர பேருந்தில் செல்வதாக உத்தேசம். மகளிர் பேருந்து எதுவும் இல்லாததால் கூடம் இல்லாத ஒரு பேருந்துக்காக காத்திருந்து ஏறினோம். நான்  யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று கட்டளை.
 
எனக்கு பிடித்த சில கூந்தல் விக் வாங்கி விட்டு, அருகில் இருந்த மல்டிப்ளெக்ஸ் கடைக்கு சென்றோம். கீதா சில விளையாட்டு போட்டிக்கு வெளி ஊர் செல்வதால், சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.

பின்னர் ஐஸ் கிரீம் சாப்பிட சென்றோம். நான் மெய் மறந்து ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொது பூரணி என் காலை உதைத்தால் மேஜையின் கீழ். எனக்கு காரணம் புரியாததால் நான் அதை கண்டு கொள்ள வில்லை. என் அருகில் இருந்த கீதா என் காதருகில் வந்து விஷயத்தை சொன்னாள். பின்பு அவளே என் தாவணி சரி செய்து விட்டாள். ப்ளௌஸ் விட்டு வெளியே வந்த பிரா ஸ்ட்ராப் நானே சரி செய்து கொண்டேன்.

என் தாவணி விலகி போயிருந்ததால், என் மார்பகம் சிறிது தெரிந்து இருக்கிறது போலும். எனக்கு அருகில் இருந்த ஒரு ஆண் என்னை கண்ணால் விழுங்கி கொண்டிருந்தான். என் பிரா ஸ்ட்ராப் வேறு அவன் கண்ணை உறுத்தி இருக்கும். இதை நினைக்கும் பொது என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. என்னை அறியாமல் அழத்துடங்கி விட்டேன்.

காரணம் புரியாமல் கீதா , பூர்ணிமா இருவரும் திகைத்தனர். என்னை பெண்கள் கழிவறைக்கு அழைத்து சென்று காரணம் கேட்டனர். நான் காரணம் சொன்னபோது இருவரும் சிரித்து விட்டனர்.

"ஐயோ அபி, இது எல்லாம் பொண்ணுங்க வாழ்க்கைல சாதாரணம். இதுக் எல்லாமா அழுவாங்க? நம்ப தான் உசாரா இருக்கனும் டி." என்றாள் பூரணி.

கீதா என் கண்ணை துடைத்து விட்டு மேக்கப் சரிசெய்து விட்டாள். இருந்தும் நான் ஒரு மாதிரி தான் இருந்தேன். என்னை சந்தோஷ படுத்த, இருவரும் என்னை காலணிகள் கடைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்றவுடன், என்னை அரியம் எனது பெண்ணுணர்வு வெளி வந்தது. எனக்குள் ஒரு சந்தேகம். நான் ஏன் இப்படி ஒரு நிஜமான பெண்ணை மாதிரி சந்தோசப் படுகிறேன்? நிஜத்தில் நான் ஒரு ஆண் தானே.. இப்படி பல குழப்பம் என் மனதில்.

இறுதியில் எனக்கு  ஒரு ஹை ஹீல்ஸ் வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.

எனக்குள் இருந்த அந்த குழப்பம் மீண்டும் வந்தது.

நான் ஒரு ஆண்  அல்லது ஒரு பெண் ? நான் நிஜமாக ஒரு பெண்போல் ஏன் நடந்து கொள்கிறேன்? என் வாழ்கை என்னவாகும் கல்லூரிக்குப் பின்?

தூக்கம் வரவில்லை, என் எதிர்காலத்தை நினைத்து. மனது சோகமானது. அப்போது என் கண்ணில் பட்டது புதியாய் வாங்கிய ஹை ஹீல்ஸ்.

இதோ மீண்டும் மனதில் சந்தோசம் அதை போட்டு கொஞ்சம் தூரம் என்  அறையில் நடந்து பழகிய போது.