Wednesday, December 31, 2014

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 2

இன்று பொங்கல். இன்றும் விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். எங்கள் வீட்டில் இப்போது தான் கொண்டாட்டங்கள் முடிந்தது. அம்மா செய்த பொங்கல் நல்லா சாப்பிட்டேன். கீதாவும் அம்மாவும் தான் சேர்ந்து காலையில் இருந்து சமையல் செய்தார்கள். நான் வழக்கம் போல தூங்கி கொண்டுஇருந்தேன் அப்போது.

பூஜையும் சாப்பாடும் முடிந்துவிட்டதால் நான் டி.வீ பார்த்துகொண்டு இருந்தேன். அப்போ கீதா என்முன்னாடி வந்து தனது புது பாவாடை தாவணி பற்றி கேட்டாள்.

"ஆனந்த், எப்படிடா இருக்கு என்னோட புது பாவாடை தாவணி?"

"லூசு, வழி விடுடி.. டி.வீ ய மறைக்காத."

"சொல்லு டா.. எப்படி இருக்கேன்?"

"கேவலமா இருக்க" என்று அவளை வெறுப்பேத்தி அனுப்பி வைத்தேன்.

பூர்ணிமா இன்னும்அவள் வீட்டுக்கு வராததால் எனக்கு செம போர். அவள் வருகைக்காக மாலை வரை காத்திருந்தேன். இதோ மாலை வந்து விட்டது.. அவளும் வந்து விட்டாள்.

நான் அவள் வீட்டுக்கு சென்றபோது அவளது உறவினர்கள் நிறைய இருந்தனர். நான் உள்ளே சென்றவுடன், அவள் என்னை கூட்டிகிட்டு வீட்டு மொட்ட மாடிக்கு சென்றாள்.

 அப்போது என் தங்கை கீதாவும் மாடிக்கு வந்தாள்.

"ஹலோ பூரணி. எப்படி இருக்க? பொங்கல் வாழ்த்துக்கள்" என்றால் கீதா.

"பொங்கல் வாழ்த்துக்கள். எனக்கு என்ன? நான் நல்ல தான் இருக்கேன். நீ?"

"நானும் நல்லாஇருக்கேன்."

"நீ ஏண்டி இங்க வந்த?" என்று கேட்டேன் நான்.

"அவள் வந்தால் உனக்கு என்ன?" என்று பெண்ணுக்கு பெண் ஆதரவாய் பேசினாள் பூரணி.

"அம்மா உங்கவீட்டுல இனிப்பு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் கீழ கொடுத்துட்டு மேல உன்னை பாக்க வந்தேன்." - கீதா சொன்னாள்.

"தேங்க்ஸ் டி கீதா. கொஞ்ச நேரம் முன்னாடி தான் வீட்டுக்கு வந்தோம். குடும்பமாய் போய் ஒரு சின்ன ட்ரிப் அடிச்சோம். அத்தை மாமா வந்துருக்காங்க, அதான்."

"நீ இல்லாம எனக்குஇன்னக்கி செம போர்" என்று என் கஷ்டத்தை சொன்னேன்.

"அதான் வந்துட்டேன்ல. ஹே கீதா.. உன்னோட இந்த பாவாடை தாவணி ரொம்ப நல்லா இருக்குடி. வா.. நம்ப ரெண்டு பேரும் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ".

"ரெண்டு பொண்ணுங்க ஒண்ணா இருந்தாலே சும்மா டிரஸ் பத்தித்தான் பேச்சு" என்று சொல்லிகொண்டே அவர்களை பூரணி போனில் போட்டோ எடுத்தேன்.

எடுத்த போட்டோவை ஒருதடவை பாத்துட்டு கீதா சென்று விட்டாள்.

"உன் தங்கச்சி இந்த பாவாடை தாவணில ரொம்ப அழகா இருக்காடா.தலை நிறைய மல்லிகை பூ வச்சி சூப்பர்ஆ இருக்கா" - என்றாள் பூரணி.


"அட.. இன்னக்கு ரொம்ப கேவலமா இருக்கா" என்று கொஞ்சம் கலாய்தேன்.

"போடா.. நீ கடைசி வரைக்கும் பொண்ணுங்களை பத்தி புரிஞ்சிக்கமாட்ட போல" என்ற பூரணி "கொஞ்சம் இருடா.. வரேன்" என்று சொல்லிவிட்டு கீழ் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து அவள் உடைமாற்றி வந்தாள்.

"என்னடி, திடிர்னு டிரஸ் மாத்திட்டு வர?" கேள்வி கேட்டேன் நான்.


"கீத்தாவை பார்த்தபின்ன எனக்கும் ஆசை வந்துடுச்சி. அதான்."

"என்னடி, எதோ வித்தியாசமா இருக்க இந்த டிரஸ்ல.. என்னடி அது?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.. வழக்கம் போலத்தான் இருக்கேன்.

தலைநிறைய மல்லிகைபூ வச்சிருக்கேன். ஜரிகை வச்ச பட்டு பாவாடை சட்டை போட்டுருக்கேன். கண்ணனுக்கு மை, போட்டு, தங்க வளையல், தங்க கம்மல், மூக்குத்தி, நெக்லஸ் போட்டுருக்கேன். என்னோட தலைமுடியை ப்ரீ ஸ்டைல் விட்டுருக்கேன்."

"அது எல்லாம் இல்லடி. வேற எதோ இருக்கு." என்றவுடன் "கண்டுபுடி" என்று கண்சிமிட்டிவிட்டு என் எதிரே நின்றாள். கண்டுபுடிக்க முடியாமல் நின்றேன்.

"சரி.. நானே சொல்றேன்.. உன்கிட்ட சொல்ல என்ன தயக்கம். என் அத்தை புதுசா வெளிநாட்டு பிரா நேற்று கொடுத்தார்கள். அது என் மார்பகங்களை இயல்பை விட பெரிசா காட்டுதுடா."

"பொண்ணுங்களுக்கு எவ்ளோ டிரஸ் வகைகள். எதோ காருக்கு உதிரி பாகங்கள் மாதிரி."

"அது எல்லாம் பொ....."

"பொண்ணுங்க சமாச்சாரம்.. எனக்கு புரியாதுன்னு சொல்ல போற",  கரெக்ட் இல்லையா?" என்றேன்.

"அதேதான்" என்று சிரித்தால்.

பின்பு, அவளே பேசத்தொடங்கினாள் - "நேத்து மாமாவிடம் என் அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். அவரைப் போலவே நானும் ஒரு டீச்சர் ஆகணுமாம். ஸோ, என்ன டீச்சர் ட்ரைனிங் காலேஜ்ல சேர்க்கப் போறாராம்."

"அதனால என்ன?"

"உனக்கு புரியலையா? நம்ம சிட்டில ஒரே ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் தாண்டா இருக்கு. அதுவும் ஒரு பெண்கள் கல்லூரி. நாமா ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிக்கணும்னு முடிவுபண்ணி இருந்தோம்.. இல்லையா?"

"ஆமாம்.. நீ சொல்றது இப்போ தான் புரியுது எனக்கு. இப்போ என்ன பண்ணலாம்?"

"நேத்து நைட் முழுசும் யோசிச்சி பாத்தேன்.. ஒரே ஐடியா தான் வருது."

"அது என்ன ஐடியா?முதல அதை சொல்லு."

"நீயும் என்கூட அதே காலேஜ்ல சேரனும்."

"எப்படி முடியும்.. அது பெண்கள் கல்லுரி."

"அதுனால என்னடா... ஒரு பொண்ணு மாதிரி நீ சேர்ந்து படி.. மொத்தம் 4 வருஷம் தான் -  3 வருஷம் B.Sc மற்றும் 1 வருடம் B.Ed. அவ்ளோதான்"

"நாலு வருடம் என்னை பொண்ணுமாதிரி இருக்க சொல்றியா? எப்படி முடியும்? எனக்கு பொண்ணுங்களை பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நீயே சொல்லிருக்க.என்னால முடியாது."

"நல்லா யோசிச்சி சொல்லுடா.. இது தான்ஒரே வழி நம்ம, ஒண்ணா படிக்க." சமாதானம் சொன்னாள் பூர்ணிமா.

"நிச்சியமா முடியாது பூரணி.. அம்மா ஒத்துக்கமாட்டாங்க"

"முதல உனக்கு சம்மதமா சொல்லு. அப்புறம் அடுத்ததை பத்தி.யோசிக்கலாம். 12th பரீட்சை முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு."

"என்னடி.. என்னபாத்தா உங்களமாதிரி பொட்டச்சிமாதிரி தெரியுதா? வேற ஐடியா இருந்த சொல்லு." என்று கோபத்துடன் பேசிவிட்டு என் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

5 comments:

  1. Nice...waiting for next part!!!

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதவும்.. தங்கள் பெயர்?

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி ரவி. எனது புனைப்பெயர் பூர்ணிமா. உங்கள் கமெண்ட்ஸ்கள் மற்ற கதைகளுக்கும் போடுங்கள்.

      Delete