Thursday, March 12, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 12

இதோ பள்ளித்தேர்வுகள் முடிந்திவிட்டது இன்றோடு. தேர்வு முடிந்து, நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் பள்ளியில்  இருந்தேன். மாலை நானும் கீதாவும் ஒன்றாக வீடு வந்தவுடன் நான் என் அறைக்குச் சென்று உள்ளாடை மற்றும் நைட்டி அணிந்து கொண்டேன்.கீதாவும் நைட்டி அணிந்து கொண்டாள்.

"அபி, இனிமேல் நமக்கு எந்த கவலையும் இல்லை. எக்ஸாம் முடிஞ்சது" கீதா ஆனந்தமாய் சிரித்தாள்.

"ஆமா  டி .. இனிமேல் எதுவும் படிக்கத் தேவை இல்லை. நிம்மதியா வெளிய போகலாம்."

"ஆமாம். அதான் எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நீ ஒரு பொண்ணு மாதிரி வெளிய போகலாம்னு அம்மா ஏற்கனவே சொன்னாங்க. நாளைக்கு நம்ம வெளிய போகலாம்."

நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்கள். அவர் கையில் சில புத்தகங்கள் இருந்தது. அவைகளை மேஜை மீது வைத்தவுடன் நானும் கீதாவும் அதைப் பார்த்தோம். அவைகள் பெண்களுக்கான மாத மற்றும் வார இதழ்கள்.

"உங்களுக்கு இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சது. டெய்லி உங்களுக்கு போர் அடிக்குமே என்று இந்த புக்ஸ் வாங்கினேன்." என்றார் அம்மா.

கீதா ஒரு ஆங்கில இதழ் ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு "மங்கையர் மலர்" எடுத்துக் கொடுத்து படிக்கச் சொன்னாள். முன்பு அம்மாவும் கீதாவும் "அவள் விகடன்" படிக்கப் பார்த்திருக்கிறேன் என்பதால் "அவள் விகடன்" இதழையும் எடுத்துக்கொண்டேன்.

இரவு உணவு சாப்பிடும் பொது அம்மாவிடம் நாளை வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினோம். அம்மா எங்களை  பத்திரமாக சென்று வரவேண்டும் என்றார். அம்மாவுக்குத் தெரியாது நாங்கள் ஏற்க்கனவே வெளியில் சென்றது. சாப்பிட்டபின் கீதா அவள் அறைக்கு சென்றுவிட்டாள். அம்மா என்னை பாத்திரம் கழுவ கூப்பிட்டார்.

சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அம்மா பேச்சு கொடுத்தார்.

"ஏண்டி அபிராமி, இனிமேல் உனக்கு லீவ் தான. என்ன செய்யப் போற?"

"தெரியல.. போர் அடிக்கும் எனக்கு வீட்டுல இருக்க."

"ஆமா, கீதாவும் விளையாட்டு போட்டிக்கு வெளியூர் போயிடுவா. நீ மட்டும் தனிமையில் இருப்ப."

"ஹ்ம்ம்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்க மா?"

"சரி, நான் யோசிச்சி சொல்றேன்" என்று அம்மா சொன்னபோது கீதாவின் குரல் கேட்டது.

"அம்மா, அக்காவுக்கு போர் அடிக்கும் என்றால் அவளுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிவைங்க" என்று சொல்லி கையில் துவைக்க வேண்டிய துணிகளை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வந்தாள்.

"பாருங்க அம்மா, அவ என்னை கிண்டல் பண்ணுறா. முதல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க." என்று கோபித்துக்கொண்டேன்.

எங்கள் சண்டையை பார்த்து அம்மா சிரித்துக்கொண்டு இருந்தார்.

"நிறுத்துங்கடி உங்க சண்டையை.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் தான் கல்யாணம். இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்க ரெண்டு பெரும் ஒரே ஆணுக்குத்தான் கழுத்தை நீட்டனும். அப்போ தான் நீங்க இப்படி சண்டை போடாம உங்க புருஷனை ஒழுங்கா கவனிப்பிங்க." என்று சொல்லி சிரித்தார்.

இதைக் கேட்டதும் எனக்கும் கீதாவும் வெட்கமாய் வந்ததால் நாங்கள் இருவரும் எங்கள் அறைக்கு ஓடிவிட்டோம். பின்பு எனது கட்டிலில் படுத்துக்கொண்டு "மங்கையர் மலர்" படிக்க ஆரம்பித்தேன். இதோ, அப்படியாய் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

No comments:

Post a Comment