Sunday, January 18, 2015

அபிராமி ஓர் ஆச்சரியம் - பகுதி 11

இன்னும் பாதி நாள் இருக்கு நான் இந்த சேலையில் இருக்க. இன்று காலை நடந்த நிகழ்ச்சியால் நான் சந்தோசமாக இருக்கிறேன். மாலையில் பூர்ணிமா அவள் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தாள். எனக்கு அவள் அம்மா ஒரு  நீள புடவையும், ஜாக்கெட் பிட்டும் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.

அம்மா செல்வி அக்காவிடம் சொல்லி அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டுவர சொன்னார். சமையல் அறையில் இருந்த செல்வி அக்காவிடம் சென்று சொன்னேன்.

"அபிராமி, என் கூட இரு. நான் உனக்கு தேநீர் போட சொல்லித்தரேன்" என்று செயல் முறைகளை சொல்லிக் கொடுத்தார். பின்பு என்னை கொண்டு போய் கொடுக்கச் சொன்னார். அம்மா சொல்லி இருக்கிறார் போல் எனக்கு இந்த மாதிரி வேலைகளை எனக்கு சொல்லித் தரவேண்டும் என்று.


நான் தேநீர் தட்டை கொண்டு வரும்போது என் கையின் அடியில் வேர்வை இருந்து உருத்தியத்தை உணர்ந்தேன். என் ஜாக்கெட் வேர்வையில் நனைந்து இருந்தது தெரிந்தது. இருந்தாலும் புடவை மாற்றும் எண்ணம் இல்லை.

எங்கள் இருவர் அம்மாவும் எங்களை கல்லூரியில் சேர்க்கும் வழிகளைப் பற்றி பேசி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் அந்த வேலைகளை பாத்துக் கொள்வதாக சொன்னதால் நான் நிம்மதி அடைந்தேன். இன்று நீண்ட நெடிய நாளாய் இருந்ததால் நான் புடவையோடு படுத்து விட்டேன்.

இதோ இன்னொரு நாள் விடிந்து விட்டது. இன்னும் பொதுத் தேர்வுக்கு 2 வாரம் தான் இருக்கு. நான், பூர்ணிமா மற்றும் கீதா மூவரும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். அம்மாவேறு வீட்டில் இல்லை. எனக்கு திடீர் என்று ஒரு ஆசை வந்தது.

"எனக்கு இன்னக்கி ஒரு பொண்ணு மாதிரி வெளிய போயிட்டு வரணும்னு ஆசை.. பரிட்சைக்கு முன்னாடி ஒரே ஒரு முறை சென்று வந்தால் எனக்கு நிம்மதியா இருக்கும்."

"வேண்டாம்டி அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க. என்றாள் கீதா.

"அதுக்குள்ள என்ன அவசரம். பரீட்சை முடியட்டும்" என்றாள் பூர்ணிமா.

"நான் தான் நேற்றே வயசுக்கு வந்து விட்டேன்ல.. அப்புறம் என்ன?" என்று கிண்டலாய் கேட்டேன். ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்தேன். ஒரு வண்டி மட்டுமே வீட்டில் இருந்ததால் நானும் பூர்ணிமாவும்  செல்லலாம் என்று முடிவு எடுத்தோம். பூர்ணிமா நீல டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாதால் நானும் அதே மாதிரி அணியலாம் என்று எண்ணினேன்.

இறுதியாக நான் டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்து வெளியே வந்தபோது கீதாவும் பூரணியும் ஆச்சரியப்பட்டனர்.



 "ஒய் அபிராமி, செமையா இருக்கடி இந்த டி-ஷர்ட்ல" என்றாள் பூர்ணிமா. கீதாவும் ஆம் என்றாள்.

"நான் புஷ்-அப் பிரா மற்றும் பிரா பேட் யூஸ் பண்றேன் இப்போ" என்றேன்.

"அது மட்டும் இல்லாம டைட்டா டி-ஷர்ட் போட்டிருக்க இல்லையா?" கேட்டாள் கீதா. நான் ஆம் என்றேன்.

"என்னடி கீதா, இவ நம்மளைவிட ஸ்பீடா இருக்கா. விட்டா இன்னைக்கே புது பாய் பிரெண்ட் புடிச்சிடுவா போல" - பூர்ணிமா.

"சீ போங்கடி. எனக்கு அது எல்லாம் புடிக்காது"

"பாக்கலாம்.. பாக்கலாம்" என்று பூர்ணிமா வெருப்பேற்றினாள்.

இதோ, நானும் பூரணியும் ஸ்கூட்டியில் போய் கொண்டிருக்கிறோம். பூர்ணிமா வண்டி ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது பின்னாடி சத்தம் கேட்டது. அது என்னவென்று வண்டியின் கண்ணாடி வழி பார்த்து விட்டாள் பூரணி.

"அபிராமி, சில பொறுக்கி பசங்க நம்மை பின் தொடர்ந்து வராங்க. நீ அமைதியா இரு"

"ஏன்?"

"பொண்ணுங்க ரோட்ல போனா அப்படித்தான் நடக்கும்"

"அது தெரியும் டி.. நான் ஏன் அமைதியா இருக்கணும்னு கேட்டேன்"

"லூசு.. நீ எதாவது பண்ணா அவுங்களுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிரும். அதான் சொல்றேன்" என்றபோது எனக்கும் அது சரி என்று பட்டது.

"மச்சி, சூப்பர் பிகருங்க டா" என்றான் ஒருவன்.

"வண்டி ஓட்டுற பொண்ணு சூப்பர் டா" என்றான் இன்னொருவன்.

"பின்னாடி இருக்குற குட்டிய பாருடா. நைட் முழுக்க அனுபவிக்கலாம்" என்று இது மாதிரி எங்கள் காதில் விழும்படி பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருவருக்கும் கோபம் வந்தாலும் அமைதியாக இருந்தோம்.

அப்போது தெருவில் இருந்த சில காவல் துறையினர் எங்களை மடக்கி லைசென்ஸ் கேட்டனர். எங்கள் பின்னால் வந்த அந்த ஆண்களையும் பிடித்தனர்.

மனதுக்குள் பயம் வந்து விட்டதால் நான் அமைதியாக இருந்தேன். பூர்ணிமா, அவள் அம்மா ஒரு கலெக்டர் என்று சொன்னதும் எங்களை விட்டுவிட்டனர். அந்த பசங்களையும் விட்டு விட்டனர் சில நோட்டுக்களை வாங்கிக் கொண்டு.

நாங்கள் கிளம்பும் போது, அந்த பையன் என்னை பின்னாடி தட்டி விட்டான். நான் அதிரிச்சி அடைந்தேன். பூர்ணிமா இதை கவனித்து காவலரிடம் சொன்னதும் அந்த இருவரையும் பிடித்து அழைத்துச் சென்றனர்.

பின்னால் நாங்கள் இருவரும் வீடு வந்து நடந்ததை கீதாவிடம் சொன்னேன்.

"அது என்னபா, உன்னை ஒரு நைட் முழுக்க வச்சி என்ன பன்னுவான் அவன்?" என்று கிண்டலடித்தாள் கீதா.

"ச்சீ போடி. சும்மா என்னை கிண்டல் பண்ணுறீங்க" என்று சிணுங்கினேன்.

இறுதியாக இன்று நடந்ததை அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டேன்.

No comments:

Post a Comment